குஷ்பூவின் புகைப்படத்தை துடைப்பத்தால் அடித்து திமுகவினர் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
திமுக அரசு வழங்கிய மகளீர் உரிமைத்தொகையை பிச்சை என கொச்சைப்படுத்தும் விதமாக நடிகையும் பாஜக தேசிய மகளீர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கூறியதை கண்டித்து. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் முன்பு திருப்பத்தூர் திமுக மகளிர் அணி சார்பில் குஷ்பூவின் உருவப் படத்தை துடைப்பத்தால் அடித்தும் குஷ்புக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குஷ்புவின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட போது அருகில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது இந்தப் போராட்டத்தில் திருப்பத்தூர் நகரம் மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கண்மணி திருப்பத்தூர் நகர மகளிரணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மகளிர் அணியினர் மற்றும் திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்