குஷ்புவின் புகைப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்

வாணியம்பாடியில் நடிகை குஷ்புவின் புகைப்படத்தை எரித்து, திமுக மகளீர் அணியினர் போராட்டம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடிகை குஷ்பூவின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தியும், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுக மகளீர் அணியினர்.. திமுக அரசு வழங்கிய மகளீர் உரிமைத்தொகை 1000 ரூபாயை பிச்சை என கொச்சைப்படுத்தும் விதமாக நடிகையும் பாஜக தேசிய மகளீர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கூறியதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக மகளீர் அணியினர் குஷ்பூவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், குஷ்புவின் படத்தை செருப்பால் அடித்தும், காலால் மிதித்தும், தீயிட்டு கொளுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்..

Tags

Next Story