நாமக்கல்லில் நாளை திமுக சிறப்பு செயற்குழு கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சிறப்பு செயற்குழு கூட்டம் நாளை (மார்ச் -11) திங்கட்கிழமை காலை 8 மணியளவில் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (மார்ச்-11) காலை 8 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிதாக தொடங்க அரசு ஆணை வழங்கிய மாண்புமிகு. கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.எனவே, கூட்டத்தில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணியின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் இராஜேஸ்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.