வடையை கொடுத்து திமுக மாணவர் அணியினர் பிரச்சாரம்

X
வாக்கு சேகரிப்பு
பழனி ஆண்டவர் கல்லூரி முன்பு மோடி வாயால் சுட்டவடையை நினைவுபடுத்தி மாணவர்களுக்கு வடையை கொடுத்து திமுக மாணவர் அணியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் இறுதிக் கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திமுக மாணவர் அணியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி முன்பாக மோடி வாயால் சுட்ட வடையை மாணவர்களுக்கு நினைவுபடுத்தி வடை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் வேலையில்லா திண்டாட்டத்தில் இளைஞர்களை தள்ளிய மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். இளைஞர்கள் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என எடுத்துக்கூறி துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Next Story
