திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் - மா.செ அறிக்கை

திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் - மா.செ அறிக்கை

தடங்கம் சுப்ரமணி

தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடக்க உள்ளதாக திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண் ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம், நாளை (17ம்தேதி) காலை 10 மணிக்கு பென்னாக ரம் சமுதாயக் கூட்டத்திலும், மதியம் 12 மணிக்கு தர்மபுரி சட்ட மன்ற தொகுதிக்கு, மாவட்ட திமுக அலுவலகத்திலும் நடக்கிறது. மாவட்ட திமுக செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர். தருண், தர்மபுரி நாடாளு மன்ற தொகுதி வேட்பாளர் அ.மணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வா கிகளின் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story