தி.மு.க பெண் கவுன்சிலர் பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

உயிருக்கு பயந்து தி.மு.க பெண் கவுன்சிலர் பாதுகாப்பு கேட்டு கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் 1-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்த தமிழ்செல்வி தி.மு.க., கட்சியில் இருந்து வருகிறார். ஒன்றிய கவுன்சிலரின் கணவர் முருகேசனின் நண்பர் கிளாபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (உயர் வகுப்பு) இருவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் டெண்டர் எடுத்து டேங்கர் லாரிகளை தனியார் நிதி நிறுவனம் மூலம் வாங்கி இணைந்து கூட்டுத் தொழில் செய்து வந்துள்ளனர். நாளடைவில், முருகேசனுக்கு சுரேஷின் மோசடி செயல் தெரிய வர கணக்கு கேட்டுள்ளார். இருவருக்கும் விரிசல் ஏற்படவே, முருகேசனிடம் பெற்ற செக் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் மிரட்டி வந்துள்ளார் என கூறப்படுகிறது. கிராமத்தில் பேச்சு வார்த்தை நடத்தியும் சுரேஷ் சம்மதிக்கவில்லை. சுரேஷ் கவுன்சிலர் தமிழ்ச்செல்வியின் கணவர் முருகேசனின் சொத்தை அபகரித்து விட்டார் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இரண்டு நாட்களில் முருகேசனை தீர்த்து கட்டி விடுவேன் என்று சுரேஷ் கொலை மிரட்டல் விட்டதாக கூறி இன்று மாலை 5 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் தஞ்சம் அடைந்துள்ளனர். சுரேஷ் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரே பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு தரையில் அமர்ந்து இருந்து வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல்லில் தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story