திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் !
திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை வகித்தார்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில மகளிர் அணி செயலாளர் பேசுகையில்:- காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
அதற்கு மகளிர் களப்பணிகளை தீவிர படுத்த வேண்டும், அனைவரும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் செல்ல வேண்டும், மகளிர் உரிமைத்தொகை உட்பட்ட திட்டங்களை விளக்கி வாக்குகள் சேமிக்க வேண்டும் என்றார்.
மகளிர் நிர்வாகிகள் லதா, ஜெசிந்தா, மேரி, ஜெனட் ஜெனஸ், அம்மு ஆன்றோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.