நடிகை குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளை இழிவாக பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகளிர் உரிமைத் தொகையை தவறாக பேசிய நடிகை குஷ்புவை கண்டித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட மற்றும் மேற்கு மாவட்ட மகளிர் அணி திமுக சார்பில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி மேற்கு மாவட்ட தொண்டரணி ஜெயா கவிதா ஆகியோர் தலைமை வகித்தனர்.

திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நகர செயலாளர் நாட்டான் மாது பொருளாளர் தங்கமணி மாவட்ட துணை செயலாளர்கள் ரேணுகாதேவி நகர துணை சேர்மன் நித்யா அன்பழகன் துணை அமைப்பாளர்கள் சாந்த ரூபி மேகலா கலைவா கலைவாணி இந்துமதி வனிதா யாஸ்மின் முத்தையம்மா முருகம்மாள் அம்பிகா பூதாள் சித்ரா மேச்சேரி அன்பழகன் இளைஞர் அணி வெங்கடேஸ்வரன் தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் கௌதம், உதயசூரியன், உள்ளிட்டா பலர் கலந்து கொண்டனர்.

Next Story