திமுக செயல் வீரர்கள் கூட்டம்

X
செயல்வீரர்கள் கூட்டம்
மண்ணச்சநல்லூரில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் பணிகள் குறித்த திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண்நேரு திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மண்ணச்சநல்லூரில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்தில் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள் பங்கு பெற்ற செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தேர்தலில் ஆற்றக்கூடிய தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், வட்ட,பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
