புள்ளம்பாடியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

புள்ளம்பாடியில்  திமுக செயல் வீரர்கள் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் தனியர் மண்டபத்தில் முன்னாள் முதல்வர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள தனியர் மண்டபத்தில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர், அவைத்தலைவர் இளங்கோவன், எளியாஸ் தலைமையிலும் , பேரூர் கழக செயலாளர் முத்துகுமார் முன்னிலையில், கூட்டம் நடைபெற்றது.

இதில் கழக உறுப்பினர் அட்டை வழங்கியும், வருகின்ற ஜூன் 3 ந்தேதி முன்னாள் முதல்வர் கருனாநிதியின் பிறந்தநாளை அனைத்து கிளைகழகங்களிலும் கொண்டாடியும் நலத்திட்ட உதவிகளும்,கழககொடி ஏற்றியும் இனிப்பு வழங்கி கெண்டாட அறிவுறுத்தப்பட்டது

இக்கூட்டத்தில் ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள்,கிளை கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story