திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிறந்தநாள்: நிர்வாகிகளிடம் வாழ்த்து

திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிறந்தநாள்: நிர்வாகிகளிடம் வாழ்த்து

வாழ்த்து பெற்ற அமைப்பாளர்

பெரம்பலூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.

பெரம்பலூர் மாவட்ட திமுகவில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பில் உள்ள டி.ஆர்.சிவசங்கரின், பிறந்தநாளை முன்னிட்டு எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன்படி பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கரை நேரில் சந்தித்து அவருக்கு சால்வே அளித்து மரியாதை செய்து தனது பிறந்த நாளை தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

இதனை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார், மேலும் இதனைத் தொடர்ந்து பல்வேறு திமுக கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியின் போது திமுக கட்சி பிரதிநிதிகள் பல உடன் இருந்தனர்.

Tags

Next Story