தி.மு.க இளைஞரணி வாகன பேரணி - கு.பிச்சாண்டி தலைமையில் வரவேற்பு

தி.மு.க இளைஞரணி வாகன பேரணி -  கு.பிச்சாண்டி தலைமையில் வரவேற்பு

வரவேற்பு 

கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடியில் தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க இளைஞரணி சார்பில் 2வது மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 17ந் தேதி சேலத்தில் நடக்கிறது. இதையொட்டி சுன்னியாகுமரியில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 15ந்தேதி மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் செல்கிறது. நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மலை தொகுதியில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதையடுத்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடியில் நேற்று காலை வந்த பேரணிக்கு துணை சபாநாயகர்கு.பிச்சாண்டி தலைமையில், சி.என்.அண்ணாதுரை எம். பி, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுமுகம் ஆகியோர் முன்னிலையில் திரளான பேர் வந்திருந்த இளைஞரணியினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மோட்டார்சைக்கிளில் வந்திருந்த 190க்கும் மேற்பட்டோர் தி.மு.க அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்கள், வியாபாரிகளிடம் விநியோகித்தனர். அதைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாகன பேரணிக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கும் பொது மக்கள், வியாபாரிகளிடம் அரசின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பின்னர் மோட்டார் சைக்கின் பேரணியினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்குபுறப்பட்டு சென்றனர். இந்நிகழ்ச்சிகளில்,தெற்கு ஒன்றிய செயலாளர் ஜேந்திரன் நகர செயலாளர்கள் கீழ்பென்னா த்தூர் அன்பு, வேட்டவலம் முருகையன் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிதலைவர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர்கள் சிவக்குமார், இளம்பரிதி, மாவட்ட பிரதிநிதிகள் குப்புசாமி,தேவேந்திரன், மாவட்ட மகளிர்அணி அமைப்பாளர் நித்யா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சதீஷ், சூர்யா, துணை அமைப்பாளர்கள் மணிகண்டன்,அவுல்தார், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சுதாகர்,கிளை செயலாளர்கள் ஏழுமலை சுப்பிரமணி, சுதாகர், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story