முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் ஆலோசனை

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் ஆலோசனை

ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து நெல்லை மாநகர திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பு அணிகளின் சார்பில் டவுன் மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பேட்டை பகுதி அவை தலைவர் சுப்பையா உள்ளிட்ட திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story