சுங்கசாவடி குறித்து திமுக இரட்டை நிலை

நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து பேசினார்.

அதிமுக ஆட்சி காலத்தில்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ்ந்தது என்றும் நாமக்கல்லில் அதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அ.தி.மு.க, பொதுச் செயலாளர் / எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சு. தமிழ்மணியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர்/ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு என்ற பகுதியில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, அதிமுக அமைப்பு செயலாளர் / முன்னாள் அமைச்சர்/ நாமக்கல் மாவட்ட செயலாளர் /சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி தலைமை வகித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், சுங்க சாவடிகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த சுங்க சாவடிகளை கொண்டு வந்தது, மத்தியில், பா.ஜ., அரசு இருக்கின்றபோது, தி.மு.க., சேர்ந்த டி.ஆர்.பாலு, தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அதனால், லாரி உரிமையாளர் மாதம் ரூ. 8,000 முதல் 10 ஆயிரம் வரை சுங்க கட்டணம் செலுத்துகின்றனர்.

தற்போது, தேர்தல் அறிக்கையில், சுங்க சாவடிகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர். கொண்டுவந்தது பா.ஜ., அதில் அங்கம் வகித்தது தி.மு.க., தற்போது மூடுவோம் என சொல்வது தி.மு.க. இரட்டை வேடம் போடும் கட்சி என்பது நிரூபணமாகி உள்ளது. அதே போல் நீட் தேர்வும் கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்று சுகாதார துறை இணை அமைச்சராக இருந்த காந்திசெல்வன் தான் நீட் தேர்வை கொண்டு வந்தார், ஆனால் இன்று நீட்டை ரத்து செய்வோம் என இரட்டை வேடம் போடுகின்றனர். அதேபோல் ஏழை மாணவர்கள் அனைவரும் மருத்துவம் படிக்க வேண்டும் என 7.5 சதவீத இடைதுக்கீட்டை அதிமுக அரசு தான் கொண்டு வந்தது, இன்று விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது.

இதனால் மக்கள் திண்டாடுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கோழி பண்ணை, லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழில் முடங்கி வேலை இழந்துள்ளனர். இதே போல் விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது, அதிமுக் ஆட்சியில் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்ய இப்பகுதியில் உள்ள விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் அதை வழங்காமல் விசைத்தறிகளை முடக்கி விட்டனர். மக்களை தந்திரமாக, விஞ்ஞான பூர்வமாக ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்,

உயர்ந்த பொறுப்பில் உள்ள முதல்வரும், விளையாட்டு துறை அமைச்சரும் கள்ள தொடர்பு என அதற்கான அர்த்தம் தெரியாமல் பேசிகின்றனர், அதற்கு அவர்கள் தான் பொருத்தமானவர்கள்.அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் என பலரும் போராட்டம் நடத்தும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீங்கள் நலமா என கேட்பது வேடிக்கையாக உள்ளது, ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஊர் ஊராக சென்று பெட்டி, பெட்டியாக மனு வாங்கி அதற்கு தீர்வு காணாமல் மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது,

இன்னும் 24 மாதங்கள் தான் இருக்கிறது ஆட்சி மாற்றத்திற்கு , போடாத ரோட்டிற்கு பணம் எடுத்த அரசு தான் திமுக அரசு, என் மீது போடப்பட்டு வழக்கு பொய்யான வழக்கு என நீதிமன்றங்களே தீர்ப்பு சொல்லி உள்ளது, எத்தனை பொய் வழக்குகள் அதிமுகவினர் மீது போட்டாலும் அதனை தூள் தூளாக உடைப்போம், ஆனால் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் யாராலும் காப்பாற்ற முடியாது. மிக் ஜாம் புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 நாட்கள் கூட உணவளிக்க முடியாத அரசு பொம்மை முதல்வர் அரசு, ஆனால் கொரோனா காலத்தில் 11 மாதம் எவ்வித வருவாயும் இல்லாமல் விலையில்லா அரிசி, பருப்பு, கோதுமை, நிவாரண தொகை வழங்கியது அதிமுக அரசு, சரக்கு இல்லாத கட்சி திமுக. எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி ஒளி மயமான தமிழகத்தை உருவாக்கிய ஆட்சி அதிமுக ஆட்சி என்றும் நாமக்கல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர், பரமத்தி-வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன். சரஸ்வதி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம் உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story