கள்ளக்குறிச்சியில் திமுகவினர் இரு சக்கர பேரணி

கள்ளக்குறிச்சியில் திமுகவினர் இரு சக்கர பேரணி

இருசக்கர வாகன பேரணி 

கள்ளக்குறிச்சி பகுதியில் தி.மு.க., இளைஞரணி மாநாட்டையொட்டி இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு வரும் டிசம்பர் 17ம் தேதி சேலம் மாவட்டத்தில் நடக்கிறது. மாநாடு தொடர்பான பிரசாரத்தை வலியுறுத்தி கன்னியாகுமரியில் துவங்கிய இரு சக்கர வாகன ஊர்வல குழு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தது. இக்குழுவினருக்கு, கச்சிராயபாளையம், வடக்கனந்தல் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மண்மலை, மாத்துார், செல்லம்பட்டு கிராமங்கள் வழியாக தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்றனர்.

Tags

Next Story