சமத்துவபுரம் குடியிருப்புகளில்திமுகவினர் சுவர் விளம்பரம்: மக்கள் குற்றச்சாட்டு

சமத்துவபுரம் குடியிருப்புகளில்திமுகவினர்  சுவர் விளம்பரம்: மக்கள் குற்றச்சாட்டு

வீடுகளில் திமுகவினர் விளம்பரம்

விருதுநகரில் சமத்துவபுரம் குடியிருப்புகளில் திமுகவினர் சுவர் விளம்பரம் வரைந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 100 குடியிருப்புகளை உள்ளடக்கிய சமத்துவபுரம் குடியிருப்பு உள்ளது. இங்கு தேர்தல் விதிமுறையை மீறி குடியிருப்பு வாசிகளின் அனுமதி இல்லாமல் திமுகவின் சின்னம் வரையப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இங்குள்ள 100 வீடுகளிலும் தேர்தல் ஆணையம் அனுமதி பெறாமல் தேர்தல் விதிமுறையை மீறி திமுகவினர் தங்களது கட்சி சின்னத்தை சுவர் விளம்பரம் செய்துள்ளதாகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags

Next Story