தொண்டு உள்ளத்துடன் மருத்துவ சேவை செய்யுங்கள்

தொண்டு உள்ளத்துடன் மருத்துவ சேவை செய்யுங்கள்

பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் 

தொண்டு உள்ளத்துடன் மருத்துவ சேவை செய்யுங்கள் என் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த செட்டியார்பேட்டை, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மீனாட்சி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 17 வது ஆண்டு பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தின் வேந்தர் ஆர்.கோமதி தலைமையில் இன்று நடைபெற்றது.

துணை வேந்தர் நீலகண்டன்,இணை வேந்தர் கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இணை வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இவ்விழாவில் சென்னையில் உள்ள காது,மூக்கு,தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும்,பத்மஸ்ரீ விருதாளருமான மருத்துவர் மோகன் காமேசுவரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மருத்துவத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த 154 பேர்,முதுகலைப் பட்ட மருத்துவப் படிப்பை முடித்த 72 பேர் உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மேலும் பட்டப்படிப்பை நிறைவு செய்த இளம் மருத்துவர்கள் எப்போதும் வணிக நோக்குடன் இல்லாமல் தொண்டு உள்ளத்துடன் மருத்துவச் சேவையாற்ற வேண்டும் என அறிவுரை அவர் வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் பல லட்சம் ஏக்கரில் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்த தஞ்சாவூரை சேர்ந்த நிர்மல்ராகவன் என்பவருக்கு ரூ.5 லட்சமும்,சென்னை காது,மூக்கு,தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூ.10லட்சமும் நன்கொடையாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

விழாவில் கல்லூரி பேராசிரியர்கள்,மருத்துவர்கள்,பட்டம் பெற வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story