சிறுத்தை புகுந்துள்ளதாக தகவலை நம்ப வேண்டாம் மாவட்ட வன அலுவலர் தகவல்....
வனத்துறை
பொதுமக்கள் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. என வெளியிட்டுள்ள தகவலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுத்தை வந்துள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில் இரண்டு சிறுத்தைகள் இருப்பது போன்ற காட்சிகள் மகராஸ்ட்டிரா மாநிலம் ஜீன்னார் என்னும் பகுதியில் பதியப்பட்ட வீடியோவாகும். மேலும், இதுபோன்ற தவறான வீடியோக்களை தகுந்த ஆதாரம் இன்றி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பி பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் தென்பட்ட சிறுத்தையை பிடிப்பதற்கு அரியலூர், பெரம்பலூர், கடலூர் கால்நடை சிறப்பு மருத்துவர்கள், வனத்துறையின் சிறப்புக் குழுவினர் மற்றும் உபகரணங்கள் கொண்டு தேடும் பணியானது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. என வெளியிட்டுள்ள தகவலின் தெரிவித்துள்ளார்.
Next Story