மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து வழங்கக்கூடாது

விருதுநகரில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில், மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வழங்கக் கூடாது என போலீஸ் டி.எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகரில் காவல்துறை சார்பாக மருந்து கடை உரிமையாளர்கள் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரி அருகே கடை நடத்தும் கடைக்காரர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மருந்துகடைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்தவித மருந்துகளும், மாத்திரைகளும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வரும் பொதுமக்களுக்குமருந்து கடைகளில் மாத்திரைகள் வழங்கக்கூடாது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவித்ரா அறிவுறுத்தினார்கள்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் விருதுநகர் பஜார் மேற்கு கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பவித்ரா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story