விளம்பர போர்டுகள் வைக்க கூடாது - மேயர் அறிவுறுத்தல்
மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடியில் நடைபாதையில் இடையூறாக கடையின் விளம்பர போர்டுகளை வைக்க வேண்டாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை பல்வேறு சாலைகள் தரம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகவே பொதுமக்கள் பள்ளி குழந்தைகள், அவர்தம் பெற்றோர்கள், குழந்தைகள் செல்லும் வாகனங்கள் போகும் பாதையில் இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக வாகனங்களையோ தங்கள் கடையின் வியாபார விளம்பர போர்டுகளையோ பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையிலும் சாலையின் ஓரங்களிலும் வைக்க வேண்டாம் என்றும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
Next Story