வெளிநாட்டு வேலை வேண்டுமா..? முகாமில் பதிவு செய்யலாம்.
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது: மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் நடைபெறும் இந்த முகாம் டிசம்பர் 9 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு, ஆலோசனை மற்றும் சுய தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 04362 - 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
Next Story