பரமத்தி வேலூர் அருகே மருத்தவர் தற்கொலை
தற்கொலை
பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன்(65). விவசாயி. இவரது மனைவி சம்பூர்ணம் (60). இவரது மகன் டாக்டர் பழனிவேல் (39). இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். செங்கோட்டையன் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செங்கோட்டையன் நேற்று முன்தினம் விஷம் அருந்தி விட்டதாக அவரது மனைவி சம்பூரணத்திடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டையன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.