10 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார் – பறிபோன மருத்துவர் உயிர்

10 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார் – பறிபோன மருத்துவர் உயிர்
X
10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து மருத்துவர் ஒருவர் பலி போலீசார் விசாரணை*
விருதுநகர் அருகே சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து 10 அடிபள்ளத்தில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மடுத்துவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சத்திய சிவராஜா (30) மருத்துவரான சத்திய சிவராஜா. அவர் அதே பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சத்திய சிவராஜா தன்னுடைய காரில் சென்று கொண்டியிருந்த போது விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அர்ஜுனா நிதி பாலம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதி சாலையின் ஒரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மருத்துவரான சத்திய சிவராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகாசி அருகே உள்ள கங்களாபுரத்தை சேர்ந்த சலூன் கடை நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து சாலையில் சென்றவர்கள் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசார் கார் விபத்தில் உயிரிழந்த மருத்துவரின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர், மேலும் விபத்தில் காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story