ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் - விடுவிக்கப்பட்ட பறிமுதல் பணம்

ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் - விடுவிக்கப்பட்ட பறிமுதல் பணம்

மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9, 78 லட்சம் பணம் உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால் திருப்பி அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும், தேர்தல் நடத்தி விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 72 பறக்கும் படை குழுக்கள், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் வாகன சோதனையில் விதிமீறலின் காரணமாக கைப்பற்றப்பட்ட ரூ.63,110, ரூ.53,150, ரூ.64,570, ரூ.1,00,800, ரூ.2,03,520, ரூ.72,980, ரூ.3,00,000, ரூ.1,20,052 என பறிமுதல் செய்யப்பட்ட மொத்தப் பணம் ரூ.9 லட்சத்து 78 ஆயிரத்து, 202 ஐ, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

Tags

Next Story