மறைமலை நகரில் நாய்கள் தொல்லை

மறைமலை நகரில் நாய்கள் தொல்லை
மறைமலை நகரில் நாய்கள் தொல்லை
மறைமலை நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

மறைமலை நகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், சிப்காட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சமீப காலமாக நகராட்சி அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

தெருக்கள் மற்றும் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று விபத்துகள் ஏற்படுத்துகின்றன. இரவு பணி முடித்து நடந்து வருவோரை கூட்டமாக சேர்ந்து துரத்துகின்றன. மறைமலை நகர் என். ஹெச். 1, 2, 3. பகுதிகள், மெல்ரோசாபுரம், செங்குன்றம், கீழக்கரணை, சிப்காட் பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தெரு நாய்களை பிடிக்க, ஒரு நாய்க்கு 2, 400 ரூபாய் வீதம் நகராட்சி நிர்வாகம், ப்ளுக்கிராஸ் அமைப்பிற்கு செலுத்துகிறது. இருப்பினும் சமீப காலமாக அந்த அமைப்பு டாக்டர்கள் இல்லை, பணியாளர்கள் இல்லை என தட்டிக்கழித்து வருகின்றனர்.

நகராட்சிகளில் இதே போலவே தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன'என, கூறினார்.

Tags

Next Story