அறந்தாங்கி அருகே கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு ரூ.10 லட்சம் நன்கொடை
நன்கொடை வழங்கல்
அறந்தாங்கி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நன்கொடையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நன்கொடையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மூக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 30 லட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்ட அப்பள்ளியின் நிர்வாகக் குழு முடிவு செய்தது.
இதற்காக மூன்றில் ஒரு பங்குத் தொகையான ரூ. 10 லட்சத்தை அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்தினர் வழங்க முடிவு செய்தனர்.இதற்கான காசோலையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ. சண்முகத்திடம் செந்தில்குமார் குடும்பத்தினர் வழங்கினர்.
அப்போது, பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீ. ஜோதிமணி, மூக்குடி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரதி ஆகியோரும் உடனிருந்தனர்.
Next Story