இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.41 லட்சம் காணிக்கை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளயில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த நிலையில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் கோசாலை உண்டியல் 1 என மொத்தம் 12 உண்டியல்கள் எண்ணப்பட்டன. மேலும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் உதவி ஆணையர்/செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமையில் 12 காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப்பட்டன. கோவிலில் மண்டபத்தில் வைத்து காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக நிரந்தர உண்டியல்கள் (11) மூலம் ரூ.40.25,294/-, கோசாலை உண்டியல்-1 மூலம் ரூ.81,960/- என ரூ.4107250 செலுத்தியுள்ளனர்.மேலும் 108 கிராம் தங்க நகைகளும், 502 கிராம்வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டது தெரியவந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.