கூட்டணி குறித்து கேள்விகள் கேட்டு உசுப்பேற்ற வேண்டாம் - ஈஸ்வரன்
திருச்செங்கோட்டில் நடந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழுவில், திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும். மலைக்குச் செல்ல மாற்று வழிப் பாதை அமைக்க ஆவண செய்ய வேண்டும், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலுக்கு தீர்த்த மண்டபம் அமைக்க வேண்டும், நட்டாத்திஸ்வரர் கோவிலுக்கு செல்ல திருச்செங்கோடு பட்லூர் பகுதியில் இருந்து பாலம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ரிக் தொழில் பணியாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும், அனைத்துஅரசு பணியாளர்கள் சீருடைகளையும்,விசைத்தறியாளர்களிடம் கொடுத்து நெய்து வழங்க நடவடிக்கை எடுத்தால் விசைத்தறி தொழில் பாதுகாக்கப்படும் அதற்கான நடவடிக்கைகளை உடனே செய்ய வேண்டும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றபட்டது. பின்னர் கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த பொதுக்குழுவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல்,மாவட்டத் தலைவர் சேன்யோ குமார், ராயல் செந்தில், லாவண்யா ரவி, கோபால்,நந்தகுமார், அசோக்குமார், கே கே செந்தில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில்,
திமுகவோ அதிமுகவோ இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழுக்களை அமைத்திருக்கிறார்களே தவிர எங்களிடம் யாரும் பேசவில்லை. கூட்டணி குறித்து எங்களிடம் கேள்விகள் கேட்டு உசுப்பேற்ற வேண்டாம். நான்கு சுவருக்குள் நடக்கிற பேச்சுவார்த்தை குறித்துவெளிப்படையாக நான் எப்போதும் பத்திரிகையாளர்களிடம் பேசுவதில்லை. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி படி அனைத்து பணிகளையும் நிறைவேற்றி இருக்கிறார். இன்னும் ஒன்றிய ,தமிழ்நாடு அரசுகள் நிறைவேற்ற வேண்டியகொங்குநாடு மக்களுக்கான கோரிக்கைகள் குறித்துபேசவே வரும் பிப்ரவரி நாலாம் தேதி பெருந்துறையில்கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நடத்துகிறது. என்றார்