பணம் கொடு‌க்கு‌ம் அரசியல்வாதிகள் உள்ளே நுழையாதீர்கள்:எச்சரிக்கை பேனர்

பணம் கொடு‌க்கு‌ம் அரசியல்வாதிகள் உள்ளே நுழையாதீர்கள்:எச்சரிக்கை பேனர்

வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்

வக்குக்கு பணம் கொடு‌க்கு‌ம் அரசியல்வாதிகள் உள்ளே நுழையாதீர்கள் என ஓய்வுப்பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டி வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது வீட்டின் வாசல் கதவில் வைத்துள்ள விளம்பரத் தட்டி, அரசியல்வாதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பேராவூரணி நீலகண்டன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60) காவல்துறையில்,

காவலராக பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் பணியாற்றி நுண்ணறிவுப்பிரிவில் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றவர். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவரது வீட்டின் முகப்பு கதவில் வித்தியாசமான விளம்பரத்தட்டி வைத்து சமூக ஆர்வலர்களையும்,

பொது மக்களையும் கவர்ந்து வருகிறார். வீட்டு முகப்பு கதவில், வாக்கு கேட்பது உங்கள் கடமை, வாக்களிப்பது என் உரிமை. பணம் கொடுத்து வாக்கு பிச்சை எடுக்கும் அரசியல்வாதிகள் உள்ளே நுழையாதீர்கள். வாக்களிக்கும் என் உரிமையை, நான் விற்கவில்லை என தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட விளம்பரத் தட்டியை வைத்துள்ளார்.

நேர்மையான தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், இது போன்று சமூக அக்கறையுள்ளவர்களை அழைத்து பாராட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story