சாலைகளில் கால்நடைகளை திரியவிட வேண்டாம் : மேயர் உத்தரவு

சாலைகளில் கால்நடைகளை திரியவிட வேண்டாம் : மேயர் உத்தரவு

மேயர்

தூத்துக்குடியில் சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டும், வாகனங்களை நிறுத்தியும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்ய வேண்டாம் என மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் இன்று நடைபெற்றது. முத்தம்மாள் காலனி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் மற்றும் நடைபெறப் போகின்ற பணிகள் குறித்து பேசினார்.

மாநகரில் வெற்றிடங்களில் நீர் தேங்காமலும், கால்நடைகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் சாலைகளிலும் தெருக்களிலும் வளர்க்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக மழை காலத்தில் சிறப்பான பணி செய்த அனைவருக்கும் மேயர் பாராட்டு தெரிவித்தார். கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி, முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்ட கழக செயலாளருமான ரவீந்திரன், சமூக ஆர்வலர் ஜசக், பகுதி சபா நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story