வீடியோ கால் வந்தால் எடுக்க வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை
கோப்பு படம்
அறிமுகம் இல்லாத நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் எடுக்க வேண்டாம்.அந்த நம்பர் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின்னர் தொடர்பு கொண்டு பேசலாம் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக கல்லுாரி மாணவ, மாணவிகள் இந்த விஷயத்தில் சிக்கி மானம்,மரியாதைக்கு பயந்து பணத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே யாரும் இந்த புதிய மோசடியில் யாரும் சிக்க வேண்டாம். அப்படி மிரட்டுபவர்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் போலீசாக்கு தகவல் தாருங்கள் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.