வாகனப்பதிவிற்கு தவறான முகவரி அளிக்காதீர்; கலெக்டர் அட்வைஸ்
வாகனப் பதிவிற்கு தவறான முகவரி அளிக்க வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.
வாகனப் பதிவிற்கு தவறான முகவரி அளிக்க வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் அனைத்து ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு சான்றுகளை, இனி விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்கும் சேவை சமீபத்தில் துவக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதே, இந்த சேவையின் நோக்கமாக உள்ளது. எனவே, 'வாகன் / சாரதி' மென்பொருளில், தவறான தொடர்பு எண் மற்றும் முகவரியை குறிப்பிட்டிருந்தால், விரைவு தபால் திரும்ப பெறப்படும். அதன்பின், விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்தி, திருத்தம் செய்த பிறகே சம்பந்தப்பட்ட ஆவணத்தை வட்டாரப் போக்குவரத்து துறையினர் மனுதாரருக்கு விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
Tags
Next Story