நரிக்குறவர் காலனியில் தற்காலிக வீடு அமைக்க கூடாது:வட்டாட்சியர் அறிவுரை

நரிக்குறவர் காலனியில் தற்காலிக வீடு அமைக்க கூடாது:வட்டாட்சியர் அறிவுரை

அறிவுரை வழங்கிய வட்டாட்சியர்

தாராபுரம் நரிக்குறவர் காலணியில் ரோட்டோரம் தாற்காலிக வீடுகளை அமைக்க கூடாது என வட்டாட்சியர் அறிவுறுத்தினார்.

தாராபுரம் பொள்ளாச்சி ரோடு பெஸ்ட் நகர் பகுதியில் 31 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 10 குடும்பத்தினருக்கு இந்திரா காந்தி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டப்பட்டு அது பழுதடைந்த நிலையில் உள்ளது.

ற்போது பழங்குடியினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 31 குடும்பங்களுக்கும் தலா ரு 5 லட்சம் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு பூமி பூஜைகள் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது . இந்நிலையில் பழைய வீடுகளை இடிப்பதற்காக தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, துணை தாசில்தார் மகேஸ்வரி,

ஆர். ஐ சரவணன்,வி.ஏ.ஓக்கள் வடிவேல், சத்தியமூர்த்தி ஆகியோர் ஆய்வை மேற்கொண்டனர் .அப்போது ரோட்டோரம் தாற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்த வட்டாட்சியர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக உள்ளது .ரோட்டோரம் தற்காலிக வீடுகள் உள்ளதால் குழந்தைகள் ரோட்டின் அருகே செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே தற்காலிக வீடுகளை பாதுகாப்பாக உள்ளே தள்ளி அமைக்குமாறு குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் .அதைஏற்றுக்கொண்டனர்.மேலும் மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகுமாறும் வட்டாட்சியர் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story