ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க - விஜய் ஆண்டனி

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என நடிகர் விஜய் ஆண்டனி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் ரோமியோ திரைப்படத்தில் நடித்து இந்த படம் வெளியானது. நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். மேலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் மிர்னாலினி ரவி, விடிவி கணேஷ், இளவரசு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து மோசமாக விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும் என்றும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க, என்றும் பதிவிட்டுள்ளார்

Tags

Read MoreRead Less
Next Story