திருப்பூரில் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு!!!

திருப்பூரில் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு!!!

விழிப்புணர்வு

திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் வீடு வீடாக சென்று டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருப்பூரில் வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறை மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிசிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிசிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிசிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிநாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 இணைந்து இன்று 25.05.24 ஹவுஸ்சிங் யூனிட் பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் அஸ்வின்குமார், சுகாதார துறை மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அவர்கள் பொது மக்களிடம் பேசுகையில், தற்போது மழை பரவலாக பெய்து கொண்டிருக்கிறது, மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், பக்கெட், குடங்கள் , தண்ணீர் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும், கொசுக்கள் உற்பத்தியாகமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தோங்காய் மூடிகள், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது கொசுக்கள் ஊற்பத்தியாகிவிடும், கொசுக்களால் டெங்கு பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காய்ச்சல், கால் வழி, வயிற்று போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பிறகு மாணவ செயலர்கள் மதுகார்த்திக், ரேவதி , கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் வீடு வீடாக சென்று கொசுக்களை ஒழிக்க சுகாதார துறையினருடன் இணைந்து மருந்து தெளிக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. நிகழ்வில் சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் சுகாதார துறை அலுவலர் முருகன் ஆகியோர் செய்திருந்தார்.

Tags

Next Story