மேலூர் அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: 30 ஜோடி மாடுகள் பங்கேற்பு

மேலூர் அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: 30 ஜோடி மாடுகள் பங்கேற்பு

மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட மாடுகள்

மேலூர் அருகே, கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டக்காளைப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி கோவில் 13ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இரண்டாம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

கட்டக்காளைப்பட்டியில் இருந்து ஒக்கூர் சாலையில், பெரியமாடு மற்றும் சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சின்னமாடு பிரிவில் 20 ஜோடிமாடுகளும் என 30 ஜோடி மாட்டுவண்டிகள் போட்டியில் பங்கேற்று பந்தய தூரத்தை சீறி பாய்ந்து கடந்து வந்தது. இரண்டு பிரிவாக நடைபெற்ற இந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில், கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற முதல் நான்கு மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுதொகை மற்றும் நினைவு கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த மாட்டுவண்டி பந்தையத்தினை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் நின்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டுகளித்த நிலையில், விழாவிற்கான ஏற்பாடு கட்டக்காளைப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story