இரட்டிப்பாக பண தருவதாக மோசடி - ஒருவர் கைது

இரட்டிப்பாக பண தருவதாக மோசடி -  ஒருவர் கைது

கைது

இரட்டிப்பாக பண தருவதாக மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவர் கைது.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த முகமது அமீன் (41) என்பவர் பண மோசடி குறித்து புகார் செய்தார். அதில், தனக்கு அறிமுகமான விஜய் என்பவர் அவரது நண்பர் சுந்தரமூர்த்தி என்பவருடன் ஆழ்வார்பேட்டையில் 'கன்சல்டேஷன்' நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார். மேலும், அந்த நிறுவனம் வாயிலாக 'ஆன்லைன்' வர்த்தகத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 4 சதவீதம் லாப தொகை கிடைக்கும் முதலீடு செய்த பணமும், ஒரே ஆண்டில் திரும்ப கிடைக்கும் என ஆசை காட்டினார். அதை நம்பி நானும் என் நண்பர்கள், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் 66 கோடி ரூபாய் முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் ரவிக்குமார், சந்தோஷ் உட்பட மேலும் சிலருடன் சேர்ந்து எங்களது பணத்தை மோசடி செய்து கடந்தாண்டு அக்டோபரில் தலைமறைவாகினர். எங்களை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேலுார் காட்பாடியைச் சேர்ந்த 8வது நபர் சந்தோஷ், 39; என்பவரை நேற்று காலை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story