வரதட்சணை கொடுமை - கணவர் உட்பட 5 பேர் கைது

வரதட்சணை கொடுமை - கணவர் உட்பட 5 பேர் கைது

பைல் படம் 

திருப்பூரை சேர்ந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன், கணவனின் பெற்றோர், தங்கை, தோழி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு வி.ஜி.வி விஜய் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (29). இவர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு வி.ஜி.வி விஜய் கார்டன் பகுதியைச் சேர்ந்த தனக்கும் , ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா தொட்டம்பாளையம் விக்னேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (34) என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தன் பெற்றோர் வீடு சார்பாக எனக்கு 20 பவுன் நகையும் , கணவர் வீட்டில் இருந்து 20 பவுன் நகையும் போடப்பட்டுள்ளது. மேலும் என் கணவருக்கு என் பெற்றோர் சார்பில் 6 பவுன் மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் செயின் அணுவிக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே என் கணவர் மற்றும் குடும்பத்தார் என்னை தரக்குறைவாக பேசி அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினர். மேலும் கோவையில் வசிக்கும் என் கணவரின் தோழியை திருமணம் செய்ய போவதாகவும் கூறி என்னிடம் சண்டை இட்டு வந்துள்ளார்.

அவ்வப்போது பெண் தோழியுடன் வெளியில் தங்கி கொண்டு வந்தார். மேலும் என்னுடன் தொடர்ந்து சண்டையிட்டு கைகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தகாத வார்த்தைகளை பேசி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கணவரின் பெண் தோழியும் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை இழிவு படுத்தி பேசி வந்துள்ளார். என் கணவரின் தகாத பழக்கத்தை கணவரின் தாய் , தந்தை மற்றும் அவரது தங்கை ஆகியோர் ஊக்கப்படுத்தி ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நான் கருவுற்று இருந்தபோது கணவரின் தோழியின் வலியுறுத்தலின் பேரில் என் கருவை கலைத்து விட வலியுறுத்தினர். நானும் எனது பெற்றோரும் பொறுமையாக இருந்து சகித்துக் கொண்டோம்.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பும் அதே இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் கருவுற்றிருந்த போது கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் கருவுற்றிருந்த நிலையில் என்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு எனது மகனை விட்டு வெளியே சென்று விடுமாறு என்னை அடித்து துன்புறுத்தி எனது கணவரின் தாயார் மற்றும் தங்கை மிரட்டி என்னை மாடிப்படியில் தள்ளி விட்டனர். இதில் கீழே விழுந்ததில் என் காலில் காயம் அடைந்தது.

தொடர்ந்து தற்போது திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றேன். என்னை தொடர்ந்து துன்புறுத்திய கணவர் , அவரது குடும்பத்தார் மற்றும் தூண்டுதலாக இருந்து எனக்கு கருக்கலைப்பு செய்த கணவரின் தோழி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

பவித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை முடிவில் கிஷோர் குமார் , கிஷோர் குமாரின் தாய் தந்தை , அவரது தங்கை மற்றும் பெண் தோழி உட்பட ஐந்து பேர் மீது வரதட்சணை கொடுமை IPC 498(A) , கருச்சிதைவு உண்டாக்குதல் IPC 312 , IPC 294(b) , IPC 323 , IPC 506(i) உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கிஷோர் குமாரை கைது செய்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story