வரதட்சணை கொடுமை: இருவர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை: இருவர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை: இருவர் மீது வழக்கு

ஆரணி அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, பெண்ணின் கணவர், மாமியார் மீது மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆரணி அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, பெண்ணின் கணவர், மாமியார் மீது மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகள் நித்யா(27).இவரும்,வேலூர் மாவட்டம், கீழ்வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மேகநாதனும் கடந்த 2011-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மேகநாதன் சரிவர வேலைக் குச் செல்லாமல் மதுபோதையில் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். மேலும் நித்யாவிடம் அவரது மாமியார் ராஜேஸ்வரி வரதட் சணை கேட்டு கொடுமை செய் தாராம்.

இதனால் நித்யா கடந்த 6 மாதங்களாக கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சிறுமூரில் இந்த நிலையில், மேகநாதன், ராஜேஸ்வரி ஆகியோர் வரதட்சணையாக ரூ.5 லட்சம், 5 பவுன் நகை கொண்டு வர வேண்டும் என்று கூறியதுடன் மிரட்டல்விடுத்தனராம். இதுகுறித்து நித்யா ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேகநாதன், ராஜேஸ்வரி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story