டாக்டர் அம்பேத்கர் விருது.!

டாக்டர் அம்பேத்கர் விருது.!

அம்பேத்கர் விருது

டாக்டர் அம்பேத்கர் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
2023-2024 ஆம் ஆண்டிற்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படுகிறது. பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு, வாழ்க்கைத் தரம் உயர் பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். 2023-ஆம் ஆண்டிற்கான விருது, 2024- ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ. 5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருதுத் தொகையும்.8 கிராம் தங்கப்பதக்கமும், இதர செலவினங்களுக்கு ரூ. 65,000/- (ரூபாய் அறுபத்து ஐந்தாயிரம் மட்டும்) சேர்த்து ஆக மொத்தம் ரூ.5.65,000/- (ரூபாய் ஐந்து இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரம் மட்டும்) வழங்கப்பட உள்ளது. எனவே 2023 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியான பட்டியலினத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கான விண்ணப்பபடிவத்தை, www.tn.gov.in/ta/forms/Deptname/16160 இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புத்தகவடிவில் (Booket) இரண்டு பிரதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் 10.11.2023ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்பா.முருகேஷ். தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story