தண்ணீர் வராததால் வாய்க்கால் உடைப்பு; விவசாயிகள் சாலை மறியல்

தண்ணீர் வராததால் வாய்க்கால் உடைப்பு; விவசாயிகள் சாலை மறியல்

கெங்கவல்லி அருகே தலைவாசல் சிவசங்கராபுரம் ஏரிக்கு தண்ணீர் வராததால் பாசன வாய்க்கால் உடைக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கெங்கவல்லி அருகே தலைவாசல் சிவசங்கராபுரம் ஏரிக்கு தண்ணீர் வராததால் பாசன வாய்க்கால் உடைக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தலைவாசல் சிவசங்கராபுரம் ஏரிக்கு தண்ணீர் வராததால் அப்பகுதி விவசாயிகள், தலைவாசல் பாசன வாய்க்காலை உடைத்தனர். இதை கண்டித்து அப் பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் அருகே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இதற்கு வசிஷ்ட நதி குறுக்கே உள்ள மணி விழுந்தான் தடுப்பணையில் இருந்து பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. இந்நிலையில் சிவசங்கராபுரத்தில் உள்ள ஏரிக்கு போதிய தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள், தலைவாசல் பாசன வாய்க்காலை உடைத்துவிட்டு, தண்ணீரை திருப்ப, பொக்லைன் மூலம் மாற்று . பாதை அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இதனால் பொக்லைனை சிறைபிடித்து, தலைவாசல் மக்கள், பாசன விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.தலைவாசல் தாசில்தார் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறையின் நீர்வள உதவி பொறியாளர் மாணிக்கம் உள்ளிட்டோர், விவசாயிகளிடம் பேச்சுநடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து இதுகுறித்து புகார் அளிக்க, தலைவாசல் ஸ்டேஷனுக்கு சென்ற பெண்கள் உள்ளிட்டோரை, இன்ஸ்பெக்டர் அழகுராணி மிரட்டும்படி பேசியதாக புகார் எழுந்தது.ஆத்திரமடைந்த மக்கள், மதியம், 12:30 மணிக்கு தலைவாசல் ஸ்டேஷன் முன்புறம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, இன்ஸ்பெக்டரின் செயலை கண்டித்தும், வாய்க்காலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். 2:00 மணிக்கு ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷ், வாய்க்கால் பகுதியை பார்வையிட்டபோது, 70 அடி அகலத்துக்கு வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது. அனுமதியின்றி வாய்க்கால் சேதப்படுத்தியது. குறித்து வருவாய், நீர்வளப்பிரிவு அலுவலர்களிடமும் விசாரித்தார். தொடர்ந்து ஆர்.டி.ஓ., மக்களிடம் பேச்சு நடத்தினார். அவர், 'தலைவாசல் ஏரிக்கு தண்ணீர் எந்த விதத்திலும் பாதிக்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்காலை உடைத்தவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார். இதனால், 3:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story