வடிகால் பணிகளால் நடைபாதை கிரானைட் கற்கள் சேதம்
தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அவற்றின் மீது சமீபத்தில், பல கோடி ரூபாய் செலவில், கிரானைட் கற்கள் பதித்து, நடைபாதை அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கும் தண்ணீர் கால்வாய்க்கு வழிந்தோடும் வகையில், சில அடி இடைவெளியில், தொடர்ச்சியாக சாலையோர கால்வாயின் பக்கவாட்டை உடைத்து, இரும்பு மூடியுடன் கூடிய தண்ணீர் உள்வாங்கிகள் கட்டப்பட்டன. இப்பணியின்போது உடைக்கப்பட்ட கிரானைட் கற்களை, நெடுஞ்சாலைத் துறையினர் மீண்டும் சீரமைக்கவில்லை. இரு மாதங்களாகியும் சரிசெய்யாததால், பாதசாரிகள், நடைபாதையில் செல்ல சிரமப்படுகின்றனர்.கால்வாய் கட்டும் போதே, உள்வாங்கிகள் அமைத்திருந்தால், மக்கள் வரிப்பணம் வீணாகி இருக்காது. பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிரானைட் கற்கள், கால்வாயும் சேதமடைந்திருக்காது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியமே, நடைபாதையை பயன்படுத்த முடியாததற்கு முழு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags
Next Story