போலீஸ் போல நடித்து 1.50 லட்சம் பணம் திருடிய நாடக நடிகர் கைது

போலீஸ் போல நடித்து 1.50 லட்சம் பணம் திருடிய நாடக நடிகர் கைது

கைது செய்யப்பட்டவர் 

போலீஸ் போல நடித்து 1.50 லட்சம் பணம் திருடிய நாடக நடிகர் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் தனியார் நிறுவன ஊழியரிடம் போலீஸ் எனக்கூறி சோதனை செய்வது போல் நடித்து' ரூ.1.50 லட்சம் திருடிய நாடக நடிகரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முருகன் 58. கதவுகளுக்கான கைப்பிடி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

அடிக்கடி மதுரை உட்பட தென்மாவட்டங்களில் விற்பனை செய்ததற்கான தொகையை வசூல் செய்வது வழக்கம். கடந்த ஏப்.,25ல் திருச்சியில் வசூல் செய்த ரூ.3.43 லட்சத்துடன் மதுரை வந்தார். இரவு 7:30 மணிக்கு கோபாலன் கொத்தன் தெருவில் நடந்து வந்தபோது, வழிமறித்த ஒருவர் தன்னை 'போலீஸ்' எனக்கூறி விசாரித்தார். கைப்பையை சோதனையிட வேண்டும் எனக்கூறி, சோதனை செய்துவிட்டு அனுப்பினார். சில அடி துாரம் சென்ற பின் சந்தேகப்பட்டு முருகன், தனது கைப்பையை பார்த்தபோது ரூ.1.50 லட்சம் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் மதுரை திடீர்நகர் ஹரிகிருஷ்ணன் (எ) ஆறுமுகபாண்டி 55,திருடியது தெரிந்தது.

அவரை நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில் ''நாடக நடிகரான இவர், அடிக்கடி இதுபோன்று 'நடித்து' மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சிறிய தொகை என்பதால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இது அவருக்கு வசதியாக போய்விட்டது. தற்போது பெரிய தொகை என்பதால் மாட்டிக்கொண்டார்'' என்றனர்.

Tags

Next Story