இலுப்பூரில் திரௌபதியம்மன், அர்சுணன் திருக்கல்யாணம்

இலுப்பூரில் திரௌபதியம்மன், அர்சுணன் திருக்கல்யாணம்

திரௌபதி அம்மன் -அர்சுணன் திருக்கல்யாணம்  

கீழ்வேளுர் அருகே இலுப்பூர் திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த திரௌபதி அம்மன் -அர்சுணன் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேரை அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 27ம் தேதி கொடிஏற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் தாழந்திருவாசல் மணி பாகவதா குழுவினரால் மகாபாரதக் கதை நடைபெற்று வருகிறது. மகாபாரத கதையில் நேற்று முந்தினம் இரவு திரவுபதியம்மன், அர்சுணன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இலுப்பூர் செல்வவிநாயகர் கோயில் இருந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து பெண் அழைப்பு, மாப்பிளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்று மலர்கலால் அலங்கரிக்கப்பட்ட திரவுபதியம்மன், அர்சுணன் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story