திமுக மாவட்ட செயலாளரை சந்தித்த திராவிட தமிழர் கட்சியினர்
ஆவுடையப்பனுடன் திராவிட தமிழர் கட்சியினர்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பனை சந்தித்த திராவிட தமிழர் கட்சியினர், மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக தங்களது தலைமை வெளியிட்ட அறிவிப்பு நகலை வழங்கினர்.
பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவினை கடந்த வாரம் திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி முதல்வரை சந்தித்து தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இதற்கான நகலினை நேற்று (மார்ச் 27) திருநெல்வேலி மாவட்ட திராவிட தமிழர் கட்சி நிர்வாகிகள் முன்னாள் தமிழக சபாநாயகரும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பனை நேரில் சந்தித்து வழங்கினர். இதில் திமுகவினர், திராவிட தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story