டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி, காணொலிக் காட்சி மூலம் துவக்கம்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி, காணொலிக் காட்சி மூலம் துவக்கம்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரம்பணிகளை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்


டெல்டா மாவட்டங்களில் தூர்வாரம்பணிகளை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக நீர்வளத்துறை சார்பில் 2024-2025 ஆண்டிற்கான சிறப்பு தூர்வாரும் பணிகளை, செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர்கள் சண்.இராமநாதன் (தஞ்சாவூர்), க.சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) ஆகியோர் பங்கேற்றனர். நீர்வளத்துறை சார்பில் 2024-2025 ஆண்டிற்கான சிறப்பு தூர்வாரும் பணிகள் தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் 5814.295 கி.மீ நீளத்திற்கு ரூ.115 கோடி மதிப்பீட்டில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள், வடிகால் போன்ற 1004 சிறப்பு தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் (ஐ.ஏ.எஸ்) நியமிக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழும், அவர்களின் அறிவுரையின்படியும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.25.41 கோடி மதிப்பில் 1210.29 கி.மீ நீளத்திற்கு 261 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தூர்வாரும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வரும் அனைத்து கிராமத்தில் இருந்தும் முன்னணி விவசாயிகள், உதவிப் பொறியாளர்கள் (நீ.வ.து), உதவி வேளாண் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து செயலர் இவர்களை உள்ளடங்கிய உழவர் குழுக்களின் ஒத்துழைப்புடன் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக உழவர் குழுக்கள் அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாண்டு மேட்டூர் நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னதாக அனைத்துப் பணிகளும் முடிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் செயல்படுத்துவதன் மூலமாக நீரோட்டம் பராமரிக்கப்பட்டு அதனை சுற்றியுள்ள ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடி நீர்மட்ட அளவு உயர்ந்து அதன் மூலம் நீரின் தரமும் மேம்படும்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மு.சண்முகம், செயற்பொறியாளர்கள் மா.இளங்கோ (காவேரி), சி.திலிபன் (வெண்ணாறு), ம.பவளக்கண்ணன் (கல்லணைக் கால்வாய்), இரா.அய்யம்பெருமாள் (அக்னியாறு), எம்.ஜி.ராஜேந்திரன் (திருவாரூர்), உதவி செயற்பொறியாளர்கள் வா.சிவகுமார் (காவேரி), எஸ்.யோகேஸ்வரன் (காவேரி), சங்கர் (வெண்ணாறு), உதவி பொறியாளர்கள் அன்புச் செல்வன், சபரிநாதன், ரேவதி மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story