பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் குடிமகன்கள் - பயணிகள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலையத்தில் தூங்கும் மதுப்பிரியர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காங்கேயம் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் காங்கேயம் சந்தை வளாகம்‌, மற்றும் பேருந்து நிலையத்தினுள் படுத்து உறங்கி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள இருக்கைகள், பேருந்து நிலைய வியாபாரக் கடைகள் முன்பும் படுத்து வெகு நேரம் உறங்குகின்றனர். இவ்வாறு இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தினுள் உறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் யார்? எங்கிருந்து வந்து இங்கு உறங்கிறார்கள்? இவர்களுக்கு வீடு குடும்பம் ஏதேனும் உள்ளதா? அல்லது கவனிப்பாரற்று வாழ்ந்து வருகின்றார்களா? என்பது குறித்து இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆராய்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பது: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்ல இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது. காங்கேயத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களான தாராபுரம், ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, பல்லடம், கரூர்‌ ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சம் பயணிகள் வந்து செல்லும் முக்கிய பேருந்து நிலையங்களாக விளங்குகிறது. மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தேவைக்காக சுமார் 250க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகளும், பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்து நிலையம் உட்புறம் புறநகர் காவல் நிலையமும் அமைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் தினசரி அளவில் பல்லாயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் பேருந்து நிலையத்தை சுகாதாரமாக வைத்தே கொள்ள நகராட்சி காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் இரவு நேரங்களில் காங்கேயம் பேருந்து நிலையத்தினுள் தங்கி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் துணி மணிகளோடு நடைமேடையில் பாய் விரித்து படுத்து இரவு முழுவதும் உறங்கி வருகின்றனர். இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது சில தினங்களாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தினுள் வசித்து வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர்‌ அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு பேருந்து நிலையத்திலேயே அரைகுறை ஆடையுடன் படுத்து உறங்குவதுடன் பேருந்து நிலையத்திலேயேவாழ்ந்தும் வருகின்றனர். இவர்கள் யார்? இவர்கள் பற்றிய‌ விவரங்கள் இவை என்ன என்பது தெரியவில்லை என்றும் மேலும் இது போன்று தங்கும் நபர்களின் விபரங்களை கண்டறிந்து அவர்களை உரிய இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் இது போன்று பொது இடத்தை உபயோகிப்பது ஏதேனும் குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்பை ஏற்படுத்தலாம் எனவும், குடும்பங்களின்றி வசித்து வருபவர்களாக இருந்தால் அரசு அவர்களுக்கு தகுந்த சேவைகளை வழங்கி இது போன்று பொது இடங்களில் குடும்பங்களின்றி தவிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பேணி காக்க வேண்டும் எனவும் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story