மோகனூரில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் - நாளை தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
மோகனூரில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் - நாளை தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
மோகனூரில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் - நாளை தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் மோகனூர் பேரூராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக நாளை தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். -பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை நாளை காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளதையொட்டி, அதற்கான விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் எம்பி மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது... நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி சுமார் 15,000 –க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட காவிரி கரையோரம் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். தமிழ்நாடு அரசின் சார்பில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பகுதிக்கு 1974-ஆம் ஆண்டு தனி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்றும், இப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி முறையான குடிநீர் விநியோக்குமாறும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ஆகியோர் மோகனூர் பேரூராட்சி பகுதிக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்கள். அதன்படி, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு திட்ட மதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இத்தருணத்தில் தமிழக முதல்வர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 24) காலை 10.30 மணி அளவில் காணொலிக்காட்சி வாயிலாக ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் மோகனூர் பேரூராட்சிக்கு தனி குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்கள். இத்திட்டத்தில் நீர் ஆதாரமாக காவிரி ஆற்றில் 3 உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் 4 மேல்நிலை நீர்த்தொட்டிகளுக்கு நீர் அனுப்பப்படும். பின்னர், 4,637 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு அரசு நிர்ணயித்துள்ள 135 லிட்டர் குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும். இதன் மூலம் மோகனூர் பேரூராட்சி சுகாதார முறையில் தங்கு தடையின்றி குடிநீர் பெற்று தன்னிறைவு பெறும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் அவர்கள் மோகனூர் பேரூராட்சி வார சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 192 எண்ணிக்கையிலான விற்பனையகம் மற்றும் 18 எண்ணிக்கையிலான வணிக வளாக கடைகளையும் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story