சேலம் சிறையில் உள்ள கைதிகளுக்கு மண்பானையில் குடிநீர்

சேலம் சிறையில் உள்ள கைதிகளுக்கு மண்பானையில் குடிநீர்

மண் பானையில் குடிநீர் வழங்கல்

வெயில் தாக்கம் அதிகமிருப்பதால் சேலம் சிறையில் உள்ள கைதிகளுக்கு மண்பானையில் குடிநீர் வழங்கப்படுவதாக சிறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. காலை 10 மணிக்கே சாலையில் நடக்க முடியாத அளவில் வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் குளிர்பானங்கள் அருந்தி வெப்பத்தை தணிக்கின்றனர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகளுக்கு குளிர் நீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கைதிகளுக்கு மண்பானையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறை சூப்பிரண்டு வினோத் கூறியதாவது. சேலம் சிறையில் உள்ள கைதிகளுக்கு வெயில் தாக்கத்தை தணிக்க மண்பானை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மண்பானைகள், கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறையின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.

மண்பானைகள் வைக்கப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் சிறையில் உள்ள அதிவிரைவு படை சிறைக்காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story