வாழ்மங்கலத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகும் குடிநீர்

வாழ்மங்கலத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகும் குடிநீர்

சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

நாகை மாவட்டம் வாழ்மங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகும் குடிநீர் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வாழ்மங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகும் குடிநீர் தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வாழ்மங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் வீணாகும் குடிநீர் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் குடிக்க மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீரை நம்பியே உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர குடிநீர் இன்றி போராடி வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படும் தண்ணீர் குறைவான அளவில் வழங்கப்படுவதால் வாழ்மங்கலம், திரௌபதி அம்மன் கோவில் தெரு, மடத்தெரு, தோப்புத் தெரு,மாதா கோவில் தெரு, கள்ளிக்காட்டு போலகம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில் திட்டச்சேரி -வாழ்மங்கலம் இடையே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் 5 -க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் முழுவதும் சாலையில் ஓடி வீணாகி வருகிறது.இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை தடுத்து குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

Tags

Next Story